
செய்திகள் மலேசியா
140 சதவீதத்திற்கும் அதிகமான எடை காரணத்தால் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன: ஜேபிஜே
கோலாலம்பூர் :
ஜேபிஜே அதிகாரிகளால் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 140 சதவீதத்திற்கும் அதிகமான எடை காரணத்தால் தான் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஜேபிஜே ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
செந்தூல் போலீஸ் நிலையத்தின் முன் கூடிய லோரி ஓட்டுநர்கள் ஜேபிஜே மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக அபராதம் செலுத்தியும் லோரிகள் திருப்பி கொடுப்படவில்லை. அவை அனைத்தும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஜேபிஜே சட்டவிதிகளை பின்பற்றி தான் நடந்து கொள்கிறது.
லோரிகளின் ஏற்றப்படும் பொருட்களுக்கு எடைக்கான விதிமுறைகள் உள்ளது. ஆனால் லோரிகளில் 70 முதல் 140 சதவீதத்திற்கும் அதிகமான எடை ஏற்றப்பட்டிருந்தது.
லோரிகளில் அதிக எடை ஏற்றுவதால் அது விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதன் அடிப்படையில் தான் லோரிகள் பறிமுதல் செய்யப்படுகிறது என்று ஜேபிஜே கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்