செய்திகள் மலேசியா
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
தேசிய அரசியல் களம் அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி பயணிக்கின்ற தற்போதைய சூழலில், மஇகாவும் முக்கியமான அரசியல் நகர்வை நோக்கி பயணிக்கிறது என்பதை மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளும்.
அதேவேளையில் இந்திய சமுதாயம் வளரும் இப்புத்தாண்டில் வளமும் நலமும் பெற்று இந்த மலையக நாட்டில் தங்கள் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்திட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலேசிய இந்தியர்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, சமயம் சார்ந்து தொடர்ந்து ஆக்ககரமாக மஇகா தொய்வின்றி செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, கல்வி மறுமலர்ச்சியில் இந்திய சமுதாயம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது மஇகாவின் நிலைப்பாடாகும்.
அந்த வகையில் துன் சாமிவேலு அவர்களின் சிந்தனைக்கேற்ப ஒவ்வொரு பட்டதாரியை உருவாக்கும் கடப்பாட்டில், மஇகாவின் கல்வி கரமான எம்ஐஇடியின் கீழ் இயங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மூலம் கல்விச் சேவையை மஇகா வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதுடன் பொருளாதார மேம்பாடு, வளப்பம், சமுதாய ஒற்றுமை, ஆன்மீக மறுமலர்ச்சி ஆகியவற்றை மலரும் இந்த 2026ஆம் வருடத்தில் எட்டிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
December 31, 2025, 4:01 pm
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
December 31, 2025, 3:27 pm
2026 அனைவருக்கும் சாதனைகள் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
December 31, 2025, 2:52 pm
