செய்திகள் மலேசியா
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
கோலாலம்பூர்:
முறையான விசா அனுமதி இல்லாமல் இருந்த 133 அந்நிய நாட்டினர் மலேசிய குடிவரவுத் துறை (JIM) நடத்திய "Ops Kutip" என்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். இது 21-வது மாடி, டேமான் தாமான் அங்க்காசா அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 133 பேர் 19 வயது முதல் 50 வயது வரையில் உள்ளனர் என்றும், அவர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றனர். அதில் 32 பேர் பெண்கள் ஆவர் என்று கோலாலம்பூர் மலேசிய குடிவரவுத் துறை (JIM) இயக்குநர் வான் முஹம்மது சௌபீ வான் யூசோஃப் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் மியான்மர் நாட்டவர்களில் ஆண்கள் 20, பெண்கள் 4 ஆவர். பாகிஸ்தான்காரர்களின் 13 ஆண்களும், பங்களாதேஷ் 27 ஆண்களும், இந்திய நாட்டவர் ஒருவரும் ஆவர்.
மேலும் 9 நேப்பாள ஆடவரும், 32 இந்தோனேசிய ஆடவர்களும் அவர்களுடன் 28 பெண்களும் அடங்குவர். இந்த நடவடிக்கையில் 35 அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 300 வெளிநாட்டு நபர்கள் சோதிக்கப்பட்டனர்.
கைதாகாதவர்கள் தப்பிக்க பல யுக்திகள் பயன்படுத்தினர். சிலர் அவசர வழியாக ஓட முயன்றுள்ளனர். மேலும் சிலர் அதிகாரிகளுடன் சண்டையும் செய்தனர். அதுமட்டுமல்லாமல் சிலர் அறையின் மூலையில் மறைந்து, ஜன்னலின் வழியாக வெளியேற முயன்றனர்.
அவர்களை குடிநுழைவு அதிகாரிகள் போலிஸாரின் உதவியுடன் வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புக்கிட் ஜலீல் குடிநுழைவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
December 31, 2025, 3:28 pm
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 31, 2025, 3:27 pm
2026 அனைவருக்கும் சாதனைகள் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
December 31, 2025, 2:52 pm
