செய்திகள் மலேசியா
2026 அனைவருக்கும் சாதனைகள் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
கோலாலம்பூர்:
பிறக்கும் 2026 அனைவருக்கும் சாதனைகள் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்.
மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.
வாழ்க்கையின் பயணத்தில் ஓர் ஆண்டின் முடிவும், மற்றொரு ஆண்டின் தொடக்கமும் நமக்கு சொல்லும் செய்தி ஒன்று தான்.
வாழ்க்கையின் தேக்கங்கள் யாவும் நீங்கி, மாற்றங்கள் அனைத்தும் ஏற்றங்களாக மாற, மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
எண்ணங்களில் தெளிவு பிறந்து, செயல்களில் துணிவு பெருகி, மனங்களில் நம்பிக்கை மலர வேண்டும் என்பதே இந்த புத்தாண்டின் பிரார்த்தனை.
பழைய வலிகள் பாடமாகி, புதிய நம்பிக்கைகள் பாதையாகி, உழைப்புக்கு உரிய பலனும், அன்புக்கு அர்த்தமுள்ள உறவும் கிடைக்கட்டும். அமைதியும், ஆரோக்கியமும் வெற்றியும் புதிய ஒளியாய் அனைவர் வாழ்விலும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” நம்முடைய எண்ணங்களும், செயல்களுமே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எனவே,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.
நாம் பார்ப்பது, கேட்பது, பழகுவது அனைத்தும் நல்ல விஷயங்களாக இருப்பதை உறுதி செய்வோம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அமைதி நிலைத்து, ஆரோக்கியம் பெருகட்டும். இந்த புத்தாண்டு வார்த்தைகளில், வாழ்க்கையில், செயல்களில், சாதனைகளில் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு யாவருக்கும் இனிதாய் மலரட்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
December 31, 2025, 4:01 pm
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
December 31, 2025, 3:28 pm
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 31, 2025, 2:52 pm
