நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன்:

சீனாவை சேர்ந்த மூன்று ஆண்கள் இன்று மஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் 26 கிலோவுக்கும் மேலான போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டனர்.

ஜி.சி. ஜோஜி, 38, ஜாங் மீ, 32, சென் செங், 36, ஆகிய மூவர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது புரிந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூவரும் டிசம்பர் 20-ஆம் தேதி அன்று இரவு 10 மணிக்கு அடோர்னா கோல்ட் காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 26.025 கிலோகிராம் மெதாம்பெட்டமின் வகை போதைப்பொருளை விற்பனை செய்தபோது பிடிபட்டனர்.

இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டம், பிரிவு 39B(1)(a) கீழ் தொடரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset