நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண் 

ஜாசின்:

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த, ஒரு சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், அந்த சிறுவன் தன்னுடைய உறவினரே என்பதைக் கண்டறிந்து மனம் உடைந்ததாக தெரிவித்துள்ளார்.

நூர் அஸ்வா என்ற அந்தப் பெண், தொடக்கத்தில் விளையாட்டு மைதானத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் வேறு யாருக்கோ நடந்தது என தாம் நினைத்ததாக கூறினார். ஆனால், அந்த வீடியோவில் தாக்கப்படுபவர் தன்னுடைய அண்ணன் மகன் என்பதறிந்து, ஆழ்ந்த வேதனை ஏற்பட்டதாக அவர் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“அடித்து, மிதித்து மயங்கும் வரை அந்த சிறுவனைத் தாக்கியதைப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இது என் குடும்பத்திலேயே நடந்தது என்பது மிகவும் வேதனையை அளிக்கிறது. இந்த சம்பவம் மலாக்காவில் நடந்தது,” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த காணொலி  சுமார் இரண்டு நிமிடங்கள் நான்கு விநாடிகள் நீளமாகும்.

டிசம்பர் 13 அன்று இந்த சம்பவம் நடந்ததாகவும், ஆனால் காவல் துறையில் புகார் டிசம்பர் 29-ஆம் திகதி, 2025 அன்று அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது யாரும் உதவிக்கு வராதது குறித்து வேதனை தெரிவித்த நூர் அஸ்வா, “இந்த கொடுமை நம் நாட்டில் எப்போது முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset