செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம்; இந்திய தொழில் துறையினரை டத்தோஸ்ரீ ரமணன் சந்திக்க வேண்டும்: டத்தோ அப்துல் ரசூல்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் இந்திய தொழில் துறையினரை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் சந்திக்க வேண்டும்.
மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் இதனை கேட்டுக் கொண்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என பிரச்சினைக்கு தீர்வு கண்ட பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
டத்தோஸ்ரீ ரமனணின் இந்த நியமனம் இந்திய தொழில் துறையினர் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது.
அதே வேளையில் நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூற அமைச்சர் எங்களை சந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
2025ஆம் ஆண்டு தங்க வணிகத்திற்கு சிறந்த ஆண்டாக அமைந்தது.
கிட்டத்தட்ட 5 முறை தங்கத்தின் விலை உயர்ந்து இன்று வலுவான நிலை அதன் விலை உள்ளது.
அதன் அடிப்படையில் 2026ஆம் ஆண்டு தங்க முதலீட்டுக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஆக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
பிறக்கும் 2026ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வேண்டும். நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் தர வேண்டும்.
இவ்வேளையில் மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
December 31, 2025, 4:01 pm
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
December 31, 2025, 3:28 pm
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 31, 2025, 3:27 pm
2026 அனைவருக்கும் சாதனைகள் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
December 31, 2025, 2:52 pm
