நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயிருடன் இருப்பவருக்கு தேசிய பதிவிலாகா எப்படி இறப்புச் சான்றிதழ் வழங்கியது; உள்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

உயிருடன் இருப்பவருக்கு தேசிய பதிவிலாகா எப்படி  இறப்புச் சான்றிதழ் வழங்க முடியும்.

இதற்கு உள்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எஸ்பிகேஎன் அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

பரிமளா என்ற பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் உள்ளது. அடையாள அட்டையும் உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அவரின் கைப்பை காணாமல் போனது. அப்போது அவர் போலிஸ் புகார் செய்தார்.

புதிய அடையாள அட்டை பெறுவதற்காக அவர் தேசிய பதிவிலாகாவிற்கு சென்றார்.

அப்போது அதிகாரிகள் விசாரித்து நீங்கள் இறந்து விட்டீர்கள். அதனால் அடையாள அட்டை வழங்க முடியாது என்று கூறியதும் பரிமளா அதிர்ந்து போனார்.

மேலும் அவர் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் வெளியாக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

அடையாள அட்டை இல்லாமல் பல பிரச்சினைகளை பரிமளா எதிர்கொண்டு வந்தார்.

இதனால் விடியல் கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்போது அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி விட்டார்.

மேலும் அவர் இஸ்லாமியத்திற்கு மாறியதற்கான அட்டையை வைத்து அவர் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

ஆக அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் அடையாள அட்டை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எடுப்பதாக கூறிய சட்டத் துறை துணையமைச்சர் குலசேகரன் இப்பிரச்சினைக்கு  என்ன சொல்ல போகிறார்.

அடையாள அட்டை இல்லாமல் தேசிய பதிவிலாக இறப்புச் சான்றிதழை வெளியிட முடியாது.

அதேவேளையில் அவர் இறந்து விட்டதாக தேசிய பதிவிலாகாவிற்கு யார் தகவல் கொடுத்தது.

எந்த ஆதாரத்தை வைத்து இந்த இறப்புச் சான்றிதழ் வெளியாக்கப்பட்டது என்பதை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset