நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு

சிரம்பான்: 

சிரம்பான்–குவாலா பிலா சாலை, கிலோமீட்டர் 23-ல் நடந்த சாலை விபத்தில், கஞ்சா உபயோகித்த பின் போதையில் கார் ஓட்டிய நபர் மோதியதால் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணமடைந்தார்.

குவாலா பிலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுபரிண்டெண்ட் முஹம்மது முஸ்தஃபா ஹுசைன் கூறுகையில், இரவு சுமார் 11.10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 23 வயது இளைஞர் ஓட்டிய பெரோடுவா வீவா ரக வாகனம், 28 வயது நபர் ஓட்டிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் மீது மோதியது  என்று  கூறினார்.

“சிரம்பானிலிருந்து பெல்டா கேரட்டோங் நோக்கி சென்ற அந்த வாகன ஓட்டுநர், சம்பவ இடத்தை அடைந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாதையில் தன வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

“உணவக உதவியாளராக பணியாற்றி வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் எதிரே வந்த வாகனத்தைத் தவிர்க்க முடியாததால் விபத்து ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. வாகன ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். உயிரிழந்தவரின் உடல் இன்று பிரேதப் பரிசோதனைக்காக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனை (HTAN)க்கு அனுப்பப்பட்டுள்ளது.

“மேலும், வாகன ஓட்டுநரின் சிறுநீர் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப சோதனையில், THC (கேனபிஸ்) வகை போதைப்பொருள் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 44(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.  தவறானப் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக நார்கோட்டிக்ஸ் பிரிவும் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset