நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு

காங்கார்: 

1951ஆம் ஆண்டு பொது விடுமுறைச் சட்டம் (சட்டம் 369) உடன்படி, 2026 ஜனவரி 1ஆம் தேதி ‘ விடுமுறை’ (Cuti Peristiwa) என பெர்லிஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.

பெர்லிஸ் முதலமைச்சர் அபு பக்கர் ஹம்சா, இந்த விடுமுறை அறிவிப்பானது  பெர்லிஸ் மாநில அரசர் துவான்கு சையத் சிராஜுதின் ஜமாலுல்லாயில் அவர்களின் அனுமதியுடன் அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

“இன்று நடைபெற்ற பெர்லிஸ் மாநில அளவிலான 2026 புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து அரசுப் பணியாளர்களையும்  மாநில மக்களையும் பாராட்டும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

"இந்த அறிவிப்பானது மக்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் தங்களின் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் ஏதுவாக இருக்கும் என நம்புகிறோம்" என்று இன்று பெர்லிஸ் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ  அறிக்கையில் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset