நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் என்னவானார்?

பெய்ஜிங்:

சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்ஃபுக்கு என்ன ஆனது என்பதை தற்போது சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டத்தில் லீ ஷாங்ஃபு இடம் பெறவில்லை.

அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 7, 8ஆம் தேதிகளில் வியட்நாம் ராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் லீ ஷாங்ஃபு கலந்துகொள்ளவில்லை.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே எந்தப் பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

சீனாவின் மிக சக்திவாய்ந்த தலைவர் என்று அழைக்கப்படும் அதிபர் ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமானவரான லீ ஷாங்ஃபு பங்கேற்காதது அவரை பதவி நீக்கம் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset