நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால்  'எச் 1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன்: விவேக் ராமசாமி 

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் என இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் பெரிதும் பலன்பெறக்கூடிய எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் என தெரிவித்துள்ளார். மேலும் எச்-1 பி விசா திட்டத்தை ஒப்பந்த அடிமைத்தனத்தின் வடிவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

குலுக்கல் முறையில் எச்-1 பி விசா வழங்கும் திட்டத்தை அகற்றிவிட்டு, உண்மையான தகுதி சேர்க்கை மூலம் விசா வழங்கப்பட வேண்டும்.

மேலும், எல்லையை பாதுகாக்க ராணுவ பலத்தை பயன்படுத்துவதோடு, சட்டவிரோத குடியேறிகளுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை நாடு கடத்துவேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset