நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்ய நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா திரும்பினார் கிம் ஜாங் உன் 

பியோங்யாங்: 

ரஷ்யா நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா திரும்பினார் அதிபர் கிம் ஜான் உன். கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷியா சென்றார்.

இந்த பயணத்தில் அதிபர் புதின், ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்து பேசினார்.

இதனையடுத்து விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு அவர்கள் சென்றனர்.

அப்போது தங்களது ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து ரஷிய ராணுவ அதிகாரிகள் கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வடகொரியா திரும்பினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset