செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு
கோலாலம்பூர்:
இன்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் குறைந்துள்ளது.
உள்ளூர் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 4.6535/6575 இலிருந்து 4.6565/6590 ஆக குறைந்தது.
மலேசிய மூவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் முஹம்மது அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் இதுகுறித்து கூறுகையில்,
சீனாவிடமிருந்து சில ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவிழந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
இதற்கிடையில், முக்கிய நாணயங்களின் மதிப்பிற்கு எதிராக ரிங்கிட் பெரும்பாலும் குறைவாக உள்ளது.
உள்ளூர் நாணயம் யூரோவிற்கு எதிராக 5.0258/0285 ஆகவும், திங்கட்கிழமை நிறைவில் 5.0230/0273 ஆகவும், பவுண்டுக்கு எதிராக 5.8774/8824 இலிருந்து 5.8812/8843 ஆகவும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், மற்ற ஆசியான் நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஏற்றம் இறக்கமாகக் காணப்பட்டுள்ளது. சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.4361/4393 இலிருந்து 3.4358/4381 ஆக வலுவடைந்துள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 2:16 pm
ரூப்பியாவின் சரிவால் மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியர்களுக்குப் ‘பண மழை’
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
