நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Toyo Tyre Malaysia Sdn Bhd நிறுவனம் பேராக்கில் சோலார் திட்டத்தை உருவாக்க 30 மில்லியன் முதலீடு

தைப்பிங்: 

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தனது தொழிற்சாலைகளில் எரிசக்தி பயன்பாட்டை முழுமையாக மேம்படுத்த Toyo Tyre Malaysia Sdn Bhd நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது. 

இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தொழிற்சாலைகளில் Toyo Tyre சோலார் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக அந்நிறுவனம் 30 மில்லியன் முதலீட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. 

அந்நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையின் கூரைகளில் சுமார் 96,000 சதுர மீட்டர் பரப்பளவில் 26,044 யூனிட் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு 30 மில்லியன் செலவாகும் என்று பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது தெரிவித்தார். 

இந்தச் சோலார் திட்டம் மாநிலத்தின் மிகப்பெரிய சோலார் திட்டமாகும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும்.

அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு கார்பன் பயன்பாட்டைக் குறைக்கவும் இயலும். மற்ற தொழிசாலைகளும் இது போன்ற செயல்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்று Toyo Tyre சோலார் திட்டத் தொடக்க விழாவில் சாரணி இவ்வாறு கூறினார். 

மாநில அரசு ஸ்மார்ட் சோலார் தெரு விளக்குகள் நிறுவ வேண்டிய இடங்களை அடையாளம் கண்டு வருவதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடி கிராமங்கள் உட்பட கிராமப்புறங்களில் 1,000 யூனிட் விளக்குகளை நிறுவ இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset