நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு

கோலாலம்பூர்: 

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.

இன்று காலை 9 மணியளவில், உள்ளூர் நாணயம்  4.6435/6485 இலிருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 4.6535/6570 இல் வர்த்தகமானது.

தொழில்நுட்ப ரீதியாக, ரிங்கிட் சில காலமாக அதிக விற்பனையான நிலையில் உள்ளதாக முவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித் தலைவர் டாக்டர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார். 

ஜூலையில் உற்பத்தித் துறைக்கான சமீபத்திய உலகளாவிய கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (பிஎம்ஐ) 48.7 புள்ளிகளாக இருந்தது. இது 50 புள்ளிகளுக்குக் கீழே உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள அதிகமான வணிகங்கள் நம்பிக்கை குறைவாக இருப்பதைக் குறிக்கின்றது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.64-RM4.65 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை தொடக்க அமர்வில், உள்ளூர் நாணயம் 3.1932/1968 இலிருந்து ஜப்பானிய யெனுக்கு எதிராக 3.1865/1891 ஆக வலுவடைந்ததுள்ளது.

யூரோவிற்கு எதிராக 5.0373/0427 இலிருந்து 5.0230/0268 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.8928/89827 இல் இருந்து 5.8827 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இருப்பினும், மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.4292/4332 இலிருந்து 3.4298/4326 ஆக இருந்தது.

தாய்லாந்து நாணயத்திற்கு எதிரான உள்ளூர் நாணயம் 13.2645/2848 இலிருந்து 13.2749/2905 ஆகவும், இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக 304.5/305.0 இல் இருந்து 305.1/305.5 ஆகவும் பலவீனமடைந்ததுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset