நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

டெஸ்லா நிறுவனத்தின் 75 ஆயிரம் ஊழியர்களின் தகவல்கள் கசிவு

கலிப்போர்னியா :

டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். 

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 75,735 ஊழியர்கள் மற்றும் முன்னாள் வேலை செய்தவர்கள் விவரங்கள் வெளியில் கசிந்துள்ளதாக வெளிநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் பார்த்து வரும் வேலை மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் வெளியில் தெரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்து வரும் 2 ஊழியர்கள் மூலம் இந்த இரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிறுவனத்தின் ரகசிய தகவல்களை கசிய விட்டது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset