நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வெங்காய ஏற்றுமதிக்கு முதல் முறையாக 40% வரி: இந்திய அரசு

புது டெல்லி:

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளது.

வெங்காயம் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலை உயர்வைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதிவரை, வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வெங்காயம் விலை உயரக் கூடும் என்று தகவல்கள் வெளியான நிலையில், இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்மையில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200ஐ கடந்தது. தற்போது தக்காளி விலை குறைந்துவிட்ட நிலையில், வெங்காயம் விலை உயராமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset