நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு  

கோலாலம்பூர்: 

இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்து அமெரிக்க டாலர் குறியீடு (டிஎக்ஸ்ஒய்) 0.20 விழுக்காடு அதிகரித்து 103,419 புள்ளிகளாக உயர்ந்ததால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் வர்த்தகம் குறைந்து சரிவு கண்டுள்ளது.

காலை 9 மணியளவில், உள்ளூர் நாணயம் புதன்கிழமை முடிவில் 4.6265/6320 இலிருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 4.6420/6455 ஆக சரிந்துள்ளது.

சீனாவின் பொருளகம் மற்றும் ஜப்பான் வங்கியின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அதன் இணக்கமான பண நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பில்லை. அதனால், அமெரிக்க டாலர் முதன்மை நாணயமாக இருக்கக்கூடும் என்று மலேசிய மூவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித் துறைத் தலைவர் டாக்டர் முஹம்மது  அஃப்சானிசம் அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார். 

எனவே, USD/MYR எதிர்காலத்தில் பலவீனமாக இருக்கும். RM4.62 மற்றும் RM4.63 இடையே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ActivTrades வர்த்தகர் Dyogenes Rodrigues Diniz, விகிதம் 4.6450 ஐத் தாண்டினால், ரிங்கிட்-அமெரிக்க டாலர் 4.6850 மற்றும் 4.7450 ஆக உயரலாம்.

மறுபுறம், 4.6130 என்ற நிலைக்கு கீழே இருந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் 4.5750 என்ற அளவில் உயரலாம் என்றார் அவர்.

இதற்கிடையில், முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஜப்பானிய யெனுக்கு எதிராக ரிங்கிட் புதன்கிழமை 3.1782/1822 இலிருந்து 3.1708/1734 ஆகவும், யூரோவுக்கு எதிராக 5.0549/0609 இலிருந்து 5.0459/0497 ஆகவும் உயர்ந்தது.

ஆனால் நேற்று பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.909020 இலிருந்து 5.909046/900146 வரை சரிந்தது.

அதே நேரத்தில், மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கலப்பு வர்த்தகமாக நடைபெற்றது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான ரிங்கிட் புதன்கிழமை 3.4086/4132 இலிருந்து 3.4102/4130 ஆக குறைந்தது. ஆனால் தாய் பாட்க்கு எதிராக 13.0777/0995 இல் இருந்து 13.0547/0693 ஆக வலுவடைந்தது.

நேற்று 8.18/8.20 இலிருந்து பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக நாணயம் 8.19/8.21 ஆக சரிந்தது. 

மேலும், இந்தோனேசிய ரூபியாவிற்கு எதிராக 302.7/303.2 இல் இருந்து 303.7/304.1 ஆக சரிந்தது.

ஒரு ரிங்கிட்டுக்கு இந்திய ரூபாய் 17.90க்கு இன்று காலையில் விற்பனை செய்யப்பட்டது.

- அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset