நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மீண்டும் சரிந்தது 

கோலாலம்பூர்:

இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு நேற்றைய சந்தை முடிவில் 4.6335/6385 இலிருந்து 4.6425/6450 ஆக குறைந்தது. டாலர் மதிப்பு ஏற்றமடைந்து வருகிறது.

ஜூலை மாதத்தில் அமெரிக்க டாலர்சில்லறை விற்பனை 0.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இது 0.4 முதல் 0.3 விழுக்காடு வரையிலான ஒருமித்த மதிப்பீட்டை முறியடித்தது.

எதிர்பார்த்ததை விட அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. அதனால், பிற நாணயங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளதாகவும், இது வரவிருக்கும் மாதங்களில் இறுக்கமான பணவியல் கொள்கையை ஏற்க அமெரிக்க கூட்டரசு ரிசர்வ் (Fed) மீது அழுத்தம் கொடுக்கலாம் என்றும் ActivTrades வர்த்தகர் Dyogenes Rodrigues Diniz, கூறினார்.

தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் (ஆர்எஸ்ஐ) கணக்கீட்டின்படி அமெரிக்க டாலர், ரிங்கிட்டுக்கு எதிராக இன்னும் சில வாரங்களில் 4.6900ஐ நோக்கி உயரக்கூடும்  என்று அவர்  கூறினார்.

சீனாவின் பணவியல் கொள்கையில் உள்ள முரண்பாடு வட்டி விகித வேறுபாடுகளின் பார்வையிலிருந்து அமெரிக்க டாலரை மாற்றும் என்று முவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித்துறையின் தலைவர், டாக்டர் முஹம்மது அஃப்ஜானிஜாம் அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார். 

ஏறக்குறைய USD/MYR RM4.63 முதல் RM4.64 வரை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானிய யெனுக்கு எதிராக 3.1885/1905க்கு 3.1830/1867ல் இருந்து ரிங்கிட் மதிப்பு குறைந்தது. ஆனால் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.8966/9030 இலிருந்து 5.8937/8968 ஆக உயர்ந்தது.

மேலும், யூரோவுக்கு எதிராக முந்தைய 5.0617/0646 லிருந்து 5.0617/0646 ஆக வலுவடைந்தது.

அதே நேரத்தில், மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது உள்ளூர் நாணயம் குறைவாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை 13.0908/1105 இலிருந்து தாய்லாந்து பாட்டுக்கு எதிராக 13.0918/1030 இல் ரிங்கிட் வீழ்ச்சியடைந்தது. 

பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக நேற்று 8.15/8.16 இலிருந்து 8.17/8.19 ஆக பலவீனமடைந்தது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக உள்ளூர் நாணயம் 3.4156/4180க்கு செவ்வாய்க்கிழமை முடிவில் 3.4155/4197 ஆகவும், இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 301.9/302.4 இல் இருந்து 302.5/302.9 ஆகவும் குறைந்தது.

ஒரு ரிங்கிட்டுக்கு இந்திய ரூபாய் 17.94க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.

- அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset