நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

லேப்டாப், டேப்லேட்டுகள் இறக்குமதி தடைக்கு அவகாசம் அளித்தது இந்தியா

புது டெல்லி:

லேப்டாப், டேப்லேட்டுகள்  உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான உரிமம் பெறுவதற்குப் போதிய அவகாசம் வழங்கப்படும் என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லேப்டாப், டேப்லேட்டுகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி உரிமம் பெற்ற வர்த்தகர்கள் மட்டுமே இனி லேப்டாப், டேப்லேட்டுகளை  இறக்குமதி செய்ய முடியும்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லேப்டாப், டேப்லேட்டுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வர்த்தகர்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த உரிமத்தை அவர்கள் பெறுவதற்குப் போதிய அவகாசம் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset