நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அரிசி ஏற்றுமதிக்கு இந்திய தடையால் பாகிஸ்தான் மகிழ்ச்சி

கராச்சி:

பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்ததால், சர்வதேச அளவில் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உள்நாட்டில் அரிசி விநியோகத்தை அதிகரிக்கவும், சில்லறை விற்பனையில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா கடந்த மாதம் 20ம் தேதி தடைவிதித்தது.

இது சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிசி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்  கூறுகையில், இந்தியா தடை விதிப்பதற்கு முன்பு, அரிசி ஒரு டன் 450 டாலருக்கு பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதியானது. தற்போது, 500 டாலராக உயர்ந்துள்ளது. அரிசியின் தரத்தைப் பொருத்து வரும் நாள்களில் இந்த விலை 600 டாலரையும் நெருங்கலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பிற ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ரஷியாவும் பாகிஸ்தானிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset