நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

புரோட்டோன் 90,000 கார்கள் விற்பனை: புதிய சாதனை

சுபாங் ஜெயா:

தேசிய கார் உற்பத்தியாளரான புரோட்டோன் கடந்த ஜூலை மாதம் 13,326 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 16.1 விழுக்காடு 
அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு இவ்வாண்டு  அதன் விற்பனையை 90,647-க்கு உயர்த்தியுள்ளது. 

2012-ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறுகிய காலக்கட்டத்தில் புரோட்டோன் 90,000 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஜூலை மாத சந்தைப் பங்கு 20.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையிலான சந்தைப் பங்கு 21 சதவீதமாக உள்ளது.

PENJANA ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் கார் விநியோகக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நான்கு மாதங்களில் தேவை குறையாமல் 2023-ஆம் ஆண்டிலும் மலேசியாவில் வாகன விற்பனை வலுவாக இருந்தது என்று புரோட்டோன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோஸ்லான் அப்துல்லாஹ் கூறினார்.

இந்த ஆண்டு பல புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிய அசல் உபகரண உற்பத்தியாளர்களை நாட்டிற்கு ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஆதரவு அதிகம் இருப்பதாக அவர் கூறினார். 

தொழில்துறையின் மொத்த அளவு அதிகரிப்பில் புரோட்டோன் நிச்சயமாக ஒரு பங்கைக் கொண்டிருந்தது. சதவீதத்தைப் பொறுத்தவரை, புரோட்டோன் விற்பனை வளர்ச்சி இதுவரை தொழில்துறையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

புரோட்டோன் X90 ஏற்கனவே மூன்று மாதங்களுக்குப் பிறகு அதன் விற்பனையில் முன்னணியில் உள்ளது. புரோட்டோன் X90 இப்போது மலேசியாவில் D-செக்மென்ட் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனத்தின் (SUV) விற்பனையில் உள்ளது..

இவ்வாண்டு மே மாதம் 7-ஆம் தேதி 
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மூன்று முழு மாதங்களுக்கும் குறைவாக இருந்தபோதிலும், புரோட்டோன் SUV அதன் சந்தைப் பிரிவில் ஒட்டுமொத்த விற்பனையில் முன்னணியில் உள்ளது.

ஜூலை மாதத்தில், 886 கார்கள் விற்பனையானது. 86 நாட்களில் ஒட்டுமொத்தமாக 2,225 கார்களை உற்பத்தி செய்து அதன் போட்டியாளர்களிடையே முதலிடத்தில் உள்ளது.

2023-ஆம் ஆண்டிற்கான மொத்த விற்பனையில் புரோட்டோன் பெர்சோனா 107.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இது மலேசியாவில் பி-பிரிவு செடான் விற்பனைக்கான அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் 1,953 கார்கள் விற்கப்பட்டது. இவ்வாண்டு ஜூலை வரை 14,533 கார்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் 2022 விற்பனையை விஞ்சும் பாதையில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2,630 புரோட்டான் X50 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பு ஆண்டுக்கான மொத்த விற்பனையை 20,192 யூனிட்களாக உயர்த்தியது.

புரோட்டோன் எக்ஸோரா ஜூலை மாத விற்பனையில் நான்காவது பிரிவில் முன்னணியில் இருந்தது. 374 கார்கள் விற்பனையாகி மொத்த விற்பனை 2,741 கார்களை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 13.1 சதவீதம் அதிகமாகும்.

ஜூலை 9-ஆம் தேதி தனது 38-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய புரோட்டோன் சாகா, கடந்த மாதம் 5,926 கார்கள் விற்பனையாகி, தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு நாட்டின் இரண்டாவது பிரபலமான வாகனமாகத் திகழ்வதால், அதன் புகழ் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இதற்கிடையில், புரோட்டோன் X70 கடந்த மாதம் 881 கார்கள் விற்பனையைப் பதிவு செய்து  இது இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு இதுவரை 6,997 கார்கள் விற்பனையாகியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset