நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

88 % ரூ.2000 நோட்டுகள் திரும்பின: ஆர்பிஐ

மும்பை:

இதுவரையில் ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான, 88 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

இந்த நோட்டுகளை நிகழாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே மாதம் ஆர்பிஐ அறிவித்திருந்தது.

ஜூலை 31 வரை ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. தற்போது ரூ.42,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளன.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி தேதியான செப்டம்பர் 30ஆம் தேதி வரை காத்திருக்காமல், விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset