நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு நிலையாகவுள்ளது

கோலாலம்பூர்:

இன்று காலை ஆரம்ப வர்த்தக அமர்வில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் கிட்டத்தட்ட நிலையாக இருந்தாலும் சந்தை பங்கேற்பாளர்கள் இன்னும் உலகளாவிய நாணயக் கொள்கை இறுக்கத்தில் எச்சரிக்கையான நிலைப்பாட்டைக் கொண்டு வருவதால், மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அஃது உயர்ந்தது.

காலை 9 மணியளவில், உள்ளூர் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 4.5050/5090 இலிருந்து 4.5060/5125 ஆக குறைந்தது.

முக்கிய வட்டி விகிதம் தொடர்பான ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் முடிவின் மீது இன்றைய கவனம் இருப்பதாக முவாமாலாட் மலேசிய வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித் துறைத் தலைவர் டாக்டர் முஹம்மத் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார். 

ரொக்க விகிதத்தில் 25 அடிப்படை புள்ளி அதிகரிப்பை சந்தை எதிர்பார்க்கிறது. இது தற்போது 4.10 சதவீதமாக உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பணவீக்க விகிதம் 2023-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 7.0 சதவீதத்திலிருந்து 6.0 சதவீதமாக குறைந்திருந்தாலும், அது இலக்கை விட அதிகமாகவுள்ளது. 

USD/MYR மாற்று விகிதம் தற்போதைக்கு 4.50 வெள்ளி என்ற நிலையில் நிலைபெறலாம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், முக்கிய நாணயங்களின் குழுவை விட ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

இது ஜப்பானிய யெனுக்கு எதிராக திங்களன்று 3.1658/1689 இலிருந்து 3.1619/1667 ஆகவும், யூரோவிற்கு எதிராக 4.9690/9734 இலிருந்து 4.9516/9588 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.7807/78981 ஆக முந்தைய /5.79616 இல் இருந்து அதிகமாகவும் அதிகரித்தது.

அதே சமயம், உள்ளூர் அலகு மற்ற ஆசியான் நாணயங்களுக்கு எதிராக கலப்பு வர்த்தகம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான ரிங்கிட் திங்கட்கிழமை முடிவில் 3.3877/3910 இலிருந்து 3.3875/3926 ஆக உயர்ந்தது மற்றும் தாய் பாட்க்கு எதிராக 13.1594/1765 இல் இருந்து 13.1485/1752 ஆக உயர்ந்தது.

இருப்பினும், நேற்று பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு 8.20/8.22 இலிருந்து 8.21/8.23 ஆகவும், இந்தோனேசிய ரூபியா 298.6/299.1 இலிருந்து 298.7/299.3 ஆகவும் குறைந்தது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset