நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு

கோலாலம்பூர்:

அமெரிக்கக் பொது கூட்டரசு குழு கூட்டத்திற்கு முன்னதாக வளர்ந்த நாடுகளின் யூனிட் கணிசமாக வலுப்பெற்றதால் உள்ளூர் சந்தையில் பாதிக்கப்பட்டுள்ளதால், திங்களன்று காலை  அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சரிவடைந்தது. 

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 4.5600/5655 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.5670/5710 ஆக சரிந்ததுள்ளது.

முவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித் துறைத் தலைவர் டாக்டர் முகமது அஃப்ஸானிசம் அப்துல் ரஷித், ஜூலை 25 முதல் 26 வரை இரண்டு நாள் அமெரிக்கக் பொது கூட்டரசு குழுக் கூட்டத்துடன் தொடங்கிய முக்கிய மத்திய வங்கிகளின் கூட்டத் தொடரில் முக்கியக் கவனம் செலுத்தி இந்த வாரம் ரிங்கிட் எச்சரிக்கையான உணர்வுடன் வர்த்தகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இதில் சந்தையும் எதிர்வினையாற்றியதாகவும், இதன் விளைவாக ரிங்கிட்டின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அவ்வகையில், அமெரிக்க டாலருக்கான தேவை தொடர்ந்து வலுப்பெறுவதையும், அமெரிக்க டாலர்-ரிங்கிட் இணைப்பு இன்று RM4.56 முதல் RM4.57 வரை இருக்கிறது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது ரிங்கிட் குறைவான செயல்திறனைப் பதிவு செய்தது.

யூரோவிற்கு எதிராக 5.0735/0796 இலிருந்து 5.0826/0871 ஆக குறைந்தது. 

ஜப்பானிய யெனுக்கு எதிராக 3.2185/2229 இலிருந்து 3.2235/2267 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.8669/8740 இலிருந்து 5.8745/8797 ஆகவும் குறைந்தது.

ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் இதேபோன்ற செயல்திறனைப் பதிவு செய்தது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக வெள்ளிக்கிழமை 3.4304/4350 இலிருந்து 3.4328/4363 ஆகவும், பிலிப்பைன்ஸ் டாலருக்கு எதிராக 8.33/8.34 இலிருந்து 8.34/8.36 ஆகவும் குறைந்தது; 

இந்தோனேசிய ரூபியாவிற்கு எதிராக 303.4/303.9 இலிருந்து 303.8/304.3 ஆகவும், தாய் பாட்க்கு எதிராக 13.2327/2541 இல் இருந்து 13.2434/2608 ஆகவும் குறைந்தது.

- அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset