நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ரஹ்மா திட்டத்தில் இணைந்தது  ஏர்ஆசியா சூப்பர்ஆப்

* 5 இடங்களுக்கு 1 ரிங்கிட்டில் பயணம் செய்யலாம்

கோலாலம்பூர்:
அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் ஏர்ஆசியா சூப்பர்ஆப் இணைந்துள்ளது என்று கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் கீழ் ஏர்ஆசியா விமான நிறுவனம், ஹோட்டல், கார் வாடகை உட்பட பல துறைகளில் கால்பதித்து உள்ளது.

இந்நிலையில் கேப்பிட்டல் ஏவின் ஏர்ஆசியா சூப்பர்ஏப் தற்போது அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் இணைந்துள்ளது.

ஏர்ஆசியா ரைட் எனும் வாடகை காரில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 5 இடங்களுக்கு 1 ரிங்கிட்டில் பயணிக்கலாம். 

புத்ராஜெயா, சைபர்ஜெயா, புக்கிட் பிந்தாங், பண்டார் சன்வே, பங்சார் சௌத், மோண்ட் கியாரா ஆகிய இடங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணிக்கு மேல் இந்த சலுகையை பெறலாம்.

பயணக் கட்டணம் 5 ரிங்கிட்டுக்குள் இருந்தால் இந்த சலுகை வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு முதலில் பதிவு செய்யும் 3 ஆயிரம் பேருக்கு இந்த சலுகையை பெறுவார்கள்.

அதே வேளையில் ஏர்ஆசியா விமானத்தில் உள்ளூர், அனைத்துலக  பயணங்களை மேற்கொள்பவர்கள் 50 ரிங்கிட் கழிவை பெறுவார்கள்.

மேலும் ஏர்ஆசியாவின் உள்ளூர் அனைத்துலக ஹோட்டல்களை பதிவு செய்பவர்களுக்கும் 50 ரிங்கிட் கழிவு வழங்கப்படுகிறது.

விமான, ஹோட்டல்களுக்கு தினசரி தலா 100 பேருக்கு இந்த கழிவு வழங்கப்படுகிறது.

ஓடிஏ செயலியின் வாயிலாக ரஹ்மா50 எனும் கோட் வாயிலாக இந்த சலுகையை மக்கள் பெறலாம் என்று டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஏர் ஆசியா சூப்பர்ஆப் மக்கள் பயன் பெறும் திட்டங்களை தொடர்ந்து அறிவிக்கும்.

குறிப்பாக ஏர்ஆசியா சூப்பர்ஏப்பின் இம்முயற்சிக்கு ஆதரவாக இருந்து அதை தொடக்கி வைத்த உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவூடின் அயூப்பிற்கு நன்றி என்று டான்ஸ்ரீ டோனி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset