நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இன்று காலை முதல் ரிங்கிட்டின் மதிப்பு அதிகரித்து வருகின்றது

கோலாலம்பூர்: 

ஜூன் 2023-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீட்டு (சிபிஐ) தரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதால் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று காலை முதல் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

காலை 9 மணிக்கு, உள்ளூர் நாணயம் புதன்கிழமை முடிவில் 4.6500/6535 இலிருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 310 சதவீத புள்ளிகள் உயர்ந்து 4.6190/6230 ஆக இருந்தது.

US CPI மே 20-ஆம் தேதியிலிருந்து நான்கு சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் மூன்று சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது சந்தை எதிர்பார்ப்புகளான 3.1 சதவீதத்தை விட சற்றுக் குறைவாக உள்ளது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான ரிங்கிட் புதன்கிழமை மாலை வர்த்தகம் 3.4753/4782 இலிருந்து 3.4727/4762 ஆக வலுவடைந்தது.

அதேவேளையில், இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 308.4/308.8 இல் இருந்து 306.3/306.8 ஆக உயர்ந்தது.

இருப்பினும், உள்ளூர் நாணயம் தாய் பாட்டுக்கு எதிராக 13.3173/3338 இலிருந்து 13.3243/3420 ஆக இருக்கிறது.

பிலிப்பைன்ஸ் பேசோவிற்கு எதிராக 8.46/8.47 இல் மாறாமல் இருந்தது.

இந்திய ரூபாய்க்கு எதிராக ரிங்கிட் மதிப்பு வலுவிழந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி ரூபாய் 17.77 ஆக இருந்தது.

- அஷ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset