நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கொரோனா நெருக்கடி: மலேசியாவில் வாகன விற்பனை 96% குறைந்தது

கோலாலம்பூர்:

கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் வாகன விற்பனை 96 விழுக்காடு அளவுக்கு குறைந்து விட்டதாக மலேசிய ஆட்டோமோடிவ் சங்கம் Malaysian Automotive Association தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றத்தில் இருந்த விற்பனை கடந்த மாதம் சரிவு கண்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்தி, தகுந்த SOPக்களுடன் தங்கள் துறை செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என அச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடப்பாண்டில் வாகன விற்பனையானது கடந்த ஆண்டைவிட 43.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 249,129 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன என்றார் அச் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆயிஷா அஹ்மத்  (Aishah Ahmad).

Malaysian Automotive Association slams govt for delaying new car pricing  approval | The Edge Markets

"புது வகை வாகனங்களின் வருகை, கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதம், பொருளாதார ஊக்கத் தொகுப்பின்கீழ் விற்பனை வரி விலக்கு ஆகியவற்றின் காரணமாக விற்பனை அதிகரித்தது. எனினும் மாதாந்திர அளவிலான ஒட்டுமொத்த கணக்கீட்டில் பார்க்கும்போது, ஜூன் மாத விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

"கடந்த மே மாதம் 44,755 வாகனங்கள் விற்பனையான நிலையில், ஜூன் மாதம் 1,921 மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் விற்பனையானது 96 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 44,755 வாகனங்கள் விற்பனையாகின," என்றார் டத்தோ ஆயிஷா அஹ்மத்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset