நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஜப்பானிய நிறுவனங்கள் மலேசியாவில் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்புகின்றன: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் வணிகம் செய்யும் 96% ஜப்பானிய நிறுவனங்கள் தங்களின் வணிகத்தை இங்கேயே விரிவுபடுத்த விரும்புவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது  ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான (ஜெட்ரோ)-வின் ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த விரிவாக்க விகிதம் ஆசியான் சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. 

மலேசியா - ஜப்பானிடையே வலுவான அரசுத் தந்திர உறவு தொடர்ந்து 65 ஆண்டுகள் நிலைத்து இருக்கின்றது.

ஜப்பான் மலேசியாவின் மிக முக்கியமான மற்றும் நான்காவது பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 181.51 பில்லியன் மதிப்பில் ஜப்பான் இங்கு வர்த்தகம் செய்துள்ளது என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார். 

மலேசியாவிற்கு உற்பத்தித் திட்டங்களில் வரும் அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) முக்கிய ஆதாரங்களில் ஜப்பானும் ஒன்றாகும். 

கடந்தாண்டு, 91.14 பில்லியன் மதிப்பிலான மொத்த முதலீட்டில் மொத்தம் 2,746 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மொத்தம் 336,326 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய சாதகமான முதலீட்டுச் சூழலை மலேசியா தொடர்ந்து உறுதிப்படுத்துவது முக்கியம் என்று அன்வார் கூறினார்.

அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, மலேசியாவின் பொருளாதார முன்னேற்றம், சாத்தியக்கூறுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதற்கு சான்றாகும் என்றார்.

நேற்று அவர் மலேசியாவுக்கான ஜப்பானிய தூதர் தகாஹாஷி கட்சுஹிகோவுடன் ஜப்பானிய வர்த்தக மற்றும் முதலீட்டு சபையின் (ஜாக்டிம்) பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சகத்தில் ஒரு சந்திப்பை நடத்தினார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 71.4 பில்லியன் மலேசிய ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைக் கண்டதால், சமீபத்திய ஆண்டுகளில், FDI வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 60% கணிசமான முன்னேற்றமாக இது இருந்தது.

- அஷ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset