நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பார்ம் ஃப்ரெஷ் பால் நிறுவனம் கடும் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய அழுத்தத்தில் உள்ளது

கோலாலம்பூர்:

பண்ணையிலிருந்து வாங்கப்படும் பாலின் விலை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதால் பார்ம் ஃப்ரெஷ் நிறுவனத்தின் செலவுகளும் அதிகரித்துள்ளன. இதனால் அந்நிறுவனம் வர்த்தக அழுத்தத்தை எதிர்கொள்கிறது

கடந்த மாதம் முதல் ஆஸ்திரேலிய உள்ளூர் சந்தையில் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளதால் பாலின் விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக விற்கப்படுவதாக ஆர்.எச்.பி ஆராய்ச்சி ஆய்வாளர், சூங் வேய் சியாங் தெரிவித்தார். 

பண்ணையில் பாலின் விலை ஆண்டுக்கு ஆண்டு 14 விழுக்காடு குறையும். ஆனால் ஜூலை 2023-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2024-ஆம் ஆண்டு வரையிலான பாலின் விலை ஒரு சதவீதம் அல்லது செலுத்தப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது நான்கு சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்று பார்ம் ஃப்ரெஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த சூழ்நிலையானது 2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளுக்கான ஃபார்ம் ஃப்ரெஷின் வருவாய் முன்னறிவிப்பை 11 முதல் 13 சதவிகிதம் வரை குறைத்துள்ளது.

மேலும், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள தனது சொந்த பண்ணைகளிலிருந்து 70 விழுக்காடு பாலை ஃபார்ம் ஃப்ரெஷ் நிறுவனம் பயன்படுத்துகின்றது. இருப்பினும், ஃபார்ம் ஃப்ரெஷின் முந்தைய செலவுகள் அதிகரித்துள்ளன. ஃபார்ம் ஃப்ரெஷ் நிறுவனத்தின் நிதியக கணக்கு ஏமாற்றமளிக்கின்றது.

அஷ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset