செய்திகள் மலேசியா
தேசிய மனித மூலதன மாநாடு குறித்து சபா ஆளுநரிடம் விளக்கப்பட்டது: டத்தோ ஷாகுல்
கோத்தா கினபாலு:
தேசிய மனித மூலதன மாநாடு, கண்காட்சி குறித்து சபா மாநில ஆளுநரிடம் விளக்கப்பட்டது என்று எச்ஆர்டி கோர்ப் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீத் தாவூத் தெரிவித்துள்ளார்.
எச்ஆர்டி கோர்ப் உயர்மட்ட தலைவர்கள் இன்று எனது தலைமையில் சபா மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ பங்ளிமா ஹாஜி ஜுஹார் மஹிருத்தீனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
ஸ்ரீ கினபாலு அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தேசிய மனித மூலதன மாநாடு கண்காட்சி நாளை போர்னியோவில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் ஆளுநர் கலந்து கொள்ள இருக்கிறார்.
இம்மாநாடு குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முதலாளிகள், பணியாளர்கள் குறிப்பாக சபா மாநில மக்களின் மேம்பாட்டில் எச்ஆர்டி கோர்ப் அளித்துவரும் பங்களிப்பு குறித்து அவருக்கு விளக்கம் தரப்பட்டது என்று டத்தோ ஷாகுல் கூறினார்.
இந்த சந்திப்பின் போது சபா இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை குறித்தும் துன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
மேலும் எச்ஆர்டி கோர்ப், மனிதவள அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகள், சபா மாநில அரசுடன் இணைந்து அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 8:32 pm
பினாங்கில் கார்கள் மீது கொள்கலன் விழுந்ததில் மாது மரணம்: டிரெய்லர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்பு காவல்
November 14, 2024, 8:29 pm
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
November 14, 2024, 8:25 pm
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு
November 14, 2024, 8:22 pm
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
November 14, 2024, 4:24 pm
நான் நலமாக இருக்கின்றேன்: சுனிதா வில்லியம்ஸ் தகவல்
November 14, 2024, 3:05 pm
2024-2025-ஆம் ஆண்டுக்கான Bharat Ko Janiye புதிர் போட்டி தொடங்கியது
November 14, 2024, 12:01 pm
சிலாங்கூரில் 387 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு: ஹூசேன் ஓமார் கான் தகவல்
November 14, 2024, 10:56 am
சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டது: அமீர் ஹம்சா
November 14, 2024, 10:55 am