நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு: கூகுள் சுந்தர் பிச்சை

வாஷிங்டன்:

இந்தியாவுக்கான டிஜிட்டல் நிதியின்கீழ் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து வருவதாக, பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை மேலும் கூறுகையில், இந்தியாவுக்கான டிஜிட்டல் நிதியின்கீழ், கூகுள் நிறுவனத்தால் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டு வருவதை பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டேன்.

அதன் ஒரு பகுதியாக, 100 இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வசதி மேலும் பல இந்திய மொழிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றார்.

கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், குஜராத்தில் திறக்கப்படவுள்ள கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய நிதிசார் செயல்பாட்டு மையம், கூகுளின் ஜிபே மற்றும் இதர தயாரிப்புகளின் தொழில்நுட்ப ஆதரவுக்கான பிரத்யேக செயல்பாட்டு பணிக் குழுக்களுடன் இயங்கும் என்றார்.

மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், ஓபன் ஏஐ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன், ஏஎம்டி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி லிசா சூ உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset