நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

புதிய நிறங்களில் அறிமுகமான கேலக்ஸி S23 அல்ட்ரா தொலைப்பேசி

சுவோன் சி :

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா தொலைப்பேசி கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஷிப் மாடல் முதன் முதலில் ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் நிற ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 

தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் ரெட், லைட் புளூ என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய நிற வேரியண்ட்களின் விலையும் அதன் மற்ற நிறங்களைப் போன்றே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய லைட் புளூ மற்றும் ரெட் நிற வேரியண்ட்கள் சாம்சங் வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஸ்டோர்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும்.

இந்தத் தொலைப்பேசியில் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல்கள் விலை முறையே 6199.00 ரிங்கிட் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: www.sammobile.com

தொடர்புடைய செய்திகள்

+ - reset