நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு இன்றும் சரிந்தது

கோலாலம்பூர் :

இன்று காலை முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சரியத் தொடங்கி உள்ளது. 

உலகப் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பான நாணய வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள விரும்புகின்றனர் என்று பொருளாதார நிபுணர் ஒருவர்  தெரிவித்தார்.

காலை 10 மணி நிலவரப்படி, உள்ளூர் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.6385/6425 ஆக இருந்து 4.6485/6525 ஆக செவ்வாய்க்கிழமை முடிவில் சரிந்தது.

முவாமாலாட் வங்கியின் பொருளாதாரம் மற்றும் சமூக நிதித்துறைத் தலைவர் டாக்டர் முஹம்மது அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் இது குறித்து கூறுகையில், இறுக்கமான உலகளாவியப் பணப்புழக்கச் சூழலுக்கு மத்தியில் பெரும்பாலான முக்கிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த விரும்புவதால் உள்ளூர் நாணயம் இன்னும் பலவீனமாக உள்ளது என்றார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கூட்டரசு வைப்புத்தொகை இறுக்கமான பண நிலைப்பாட்டை பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சந்தை மிகவும் பதற்ற நிலையில் உள்ளது.

இதற்கிடையில், மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது ரிங்கிட் குறைவாகவே வர்த்தகம் செய்யப்படுகிறது.

நேற்றைய நாள் முடிவில் 5.9220/9271 இலிருந்து பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.9310/9361 ஆகவும், ஜப்பானிய யென் 3.2751/2781 இலிருந்து 3.2810/2840 ஆகவும்  யூரோவிற்கு எதிராக 5.07746/506/ லிருந்து 5.78746 ஆக பலவீனமாக இருந்தது.

மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது, ​​ரிங்கிட்டின் நிலை கலவையாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. 

நேற்று 13.3486/3666 இலிருந்து தாய் பாட்க்கு எதிராக ரிங்கிட் சற்று உயர்ந்து 13.3152/3378 ஆக இருந்தது, ஆனால் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.4490/4556 இல் இருந்து 3.4540/4590 ஆக சரிந்து குறைந்தது.

உள்ளூர் நாணயத்தின் மதிப்பு செவ்வாய்கிழமை 308.5/309.2 இலிருந்து இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக 308.9/309.4 ஆக சுருங்கியது 8.30/8.32 இலிருந்து பிலிப்பைன்ஸ் பேசோவிற்கு எதிராக 8.31/8.33 ஆக ரிங்கிட் பலவீனமடைந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset