நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

விவோவின் நான்காவது X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு

டொங்குவான் :

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ, தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் விவோ X90s ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

இது விவோ நிறுவனத்தின் நான்காவது X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது தவிர விவோ X90s மற்றும் ஐகூ 11s ஸ்மார்ட்போன் மாடல்களின் அம்சங்கள் வெளியாகிவுள்ளது.

விவோ X90s ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஜூன் 26-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது தவிர புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

சீனச் சமூக வலைதளமான வெய்போவில் டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் புதிய விவோ X90s மாடல் விவரங்களைப் பகிர்ந்து இருக்கின்றார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிளஸ் பிராசஸர், LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், இணையத்தில் வெளியான மற்றொரு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஐகூ 11s ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகின்றது.

ஆதாரம்: www.notebookcheck.net

தொடர்புடைய செய்திகள்

+ - reset