நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பில்கேட்ஸ் - ஷி ஜின்பிங் சந்திப்பு

பெய்ஜிஹ்:

சீனாவும் அமெரிக்காவும் இருநாட்டு நலன் கருதி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுடனான சந்திப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சீனாவுக்கு இன்று வருகை தரவுநிலையில், சீனஅதிபரின் இக் கருத்து சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சீனா முயற்சி செய்து வருகிறது. இதற்காக உலக முதலீட்டாளர்களை சீனாவுக்கு வரவைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் கடந்த மார்ச் மாதத்தில் சீனாவுக்கு வந்தார்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து சீன தொலைக்காட்சிக்கு அதிபர் ஜின்பிங் அளித்த பேட்டியில், கொரோனா  காரணமாக 3 ஆண்டுகள் கழித்து பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களைச் சார்ந்து உள்ளது. தற்போதைய உலகச் சூழலில் இரு நாடு, இரு நாட்டு மக்கள் மற்றும் மொத்த மனித இனத்தின் நலனுக்காக பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளலாம் என பில் கேட்ஸிடம் தெரிவித்தேன் என்றார்.

அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset