நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்; தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம்: மனிதவள அமைச்சர் சிவக்குமார்

புத்ராஜெயா: 

எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறந்த முறையில் தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதாக மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கண் விழித்து சிரமம் பாராமல் கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள்  சிறப்பு தேர்ச்சியைப் பெற்று பள்ளி, பெற்றோர் மற்றும் சமுதாயத்திற்குப் பெருமையை தேடித் தந்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து பயில வேண்டும்.

அதேசமயம், எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் மனம் தளர வேண்டாம்.

தொடரந்து முயற்சி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வருங்காலத்தில் உங்களுக்கும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்றார் அவர்.

அனைத்து மாணவர்களும் தங்கள் தொடர் கல்வியை பயில தொழில் கல்வியைத் தேர்வு செய்து சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ளுங்கள் 

இப்போது மனிதவள அமைச்சு உட்பட 12 அமைச்சுகள் திவேட் எனப்படும் தொழில் திறன் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

திவேட் எனப்படும் தொழில் திறன் பயிற்சிகள் மூலம் மாணவர்கள் சிறந்த ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

நாடும் உலகமும் இப்போது தொழில் திறன்  புரட்சி துறைகளில் முன்னேறி வருவதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் தங்களுக்குரிய துறைகளை தேர்வு செய்து கல்வியை தொடரும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset