நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவதைகள் கூட ஓர் இரவில் ஓடிவிடும் என்று பேசியதற்கு டத்தோஸ்ரீ ஜாஹிட் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

கோலாலம்பூர்:

தேவதைகள் கூட ஓர் இரவில் ஓடிவிடும் என்று பேசியதற்கு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தேவதைகள் கூட கட்சியின் தலைவராக இருக்க முடியாது என கூறியிருந்தேன்.

இது பணியின் சிரமத்திற்கு மத்தியில் நடந்தது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தக் கருத்தை வெளியிட்டேன்.

ஆனால் நான் செய்தது  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

ஒரு முஸ்லிம் என்ற முறையிலும், இஸ்லாத்தின் மதிப்புகள்,  கொள்கைகளையும், அறிவு மரபையும் நிலைநிறுத்தும் ஒரு கட்சித் தலைவராக நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த வார்த்தைகளின் உச்சரிப்பில் ஏற்பட்ட தவறுகளுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset