நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து என் மகள் தனலெட்சுமி இன்னும் மீளவில்லை: தாய் உருக்கம்

ஜொகூர்பாரு:

விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து என் மகள் தனலெட்சுமி இன்னும் மீளவில்லை.

தனலெட்சுமியின் தாயார் 47 வயதுடைய கார்த்தியானி இதனை கூறினார்.

நேற்று பண்டார் டத்தோ ஓன் அருகில் தெற்கு நோக்கி வடக்கு - தெற்கு எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு பள்ளி வேனும் சிமென்ட் நிரப்பப்பட்ட டிரெய்லரும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 23 மாணவர்களில் தனலெட்சுமியும் அடங்குவார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் என் மகள் மயக்க நிலையில் உள்ளார்.

கால்கள், கைகள்  தாடை இன்னும் வலிப்பதால் அவர் மீண்டும் மீண்டும் அழுது கத்திக் கொண்டிருக்கிறார்.

என் மகள் ஓட்டுநரின் பின்னால் அமர்ந்திருந்ததார். முன்பக்கத்தில் அமர்ந்திருந்த தனது நண்பர் காயமடைந்து இரத்தம் சிந்தியதை அவர் பார்த்துள்ளார்.

மேலும் விபத்தில் சிக்கிய போது நண்பர்கள் அழுவதையும் அவர்  பார்த்துள்ளார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக அவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

நான் தொழிற்சாலையில் பணி புரிந்தபோது பள்ளியிலிருந்து அழைப்பு வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்

ஆனால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படாததற்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

என் மகளை பார்க்க மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிள் பயணம் முழுவதும், வைரலான வீடியோவில் என் குழந்தையின் எந்த அறிகுறியும் இல்லாததால் நான் அழுதேன், மிகவும் கவலைப்பட்டேன் என்று அவர் உருக்கமாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset