நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகுங்கள்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மாநில மஇகாவினர் தயாராக வேண்டும்.

குறிப்பாக கெடா, பினாங்கு, சிலாங்கூ மாநிலங்களின் தேர்தல் கேந்திரம் உடனடியாக முடுக்கி விட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

நாட்டின் 6 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன.

அக்கூட்டணிக்கு மிகப் பெரிய சவாலாக தேசியக் கூட்டணி இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் கெடா, பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களின் மஇகா தலைவர்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சந்தித்தார்.

மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேசினார்.

குறிப்பாக சவால்மிக்க சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மஇகா தலைவர்கள் தயாரா வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset