
செய்திகள் மலேசியா
பள்ளி வேன் விபத்து; 5 பள்ளி மாணவர்கள் காயம்
சிரம்பான்:
பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 5 பள்ளி மாணவர்கள் சிறு காயங்களுக்கு இலக்காகினர். சம்பந்தப்பட்ட பள்ளி வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து இன்று காலை வேளையில் நிகழ்ந்தது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர் துணை கமிஷ்னர் அரிஃபாய் தாராவெ கூறினார்.
சாலையின் இடது புறத்தில் பள்ளி வேன் வளைந்த வேளையில் 17 வயது இளைஞர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் திடீரென்று வேனை மோதியது.
இதனால், பள்ளி வேனின் கண்ணாடிகள் உடைந்த வேளையில் பள்ளி மாணவர்கள் சின்ன காயங்களுக்கு இலக்காகினர் என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தினால் எந்தவொரு மாணவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm