செய்திகள் மலேசியா
மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா: முத்துக்குமார் குருக்கள், இந்திரா மாணிக்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கோலாலம்பூர்:
தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழாவில் முத்துக்குமார் குருக்கள் - இந்திரா மாணிக்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இராஜ ராஜ சோழன் சோழப் பேரரசின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழி வர்மன்.
தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, சோழப் பேரரசை விரிவுபடுத்தி, கலை, நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார்.
தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியவர் இவரே.
இராஜ ராஜ சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆஃப் ஆர்ட்ஸ் பைனஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மாபெரும் விழா நடைபெற்றது .
இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம், இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை பற்றி பேசினார்.
அதேபோல் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர் பாண்டித்துரை அவர்கள் கடாரம் கொண்டான் என்ற தலைப்பில் இராஜ ராஜ சோழனை பற்றி பேசினார்.
மஇகா தேசிய துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இராஜ ராஜ சோழன் ஒரு வரலாற்று நாயகன் மட்டுமில்லாமல் தமிழ் இனத்தின் மாபெரும் அரசனாக விளங்கியவர் என்று டத்தோஸ்ரீ சரவணன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்னமும் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது என்றார்.
டத்தோ இராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சிவஸ்ரீ அ.ப. முத்துக்குமார், இந்திரா மாணிக்கம் ஆகியோருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 4:16 pm
டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும்: தக்கியூடின்
January 26, 2026, 4:15 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டம் ரத்து: அமிரூடின் ஷாரி
January 26, 2026, 4:13 pm
தைப்பூச முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் பத்துமலைக்கு வருகிறார்: டத்தோஸ்ரீ ரமணன்
January 26, 2026, 3:11 pm
வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் அமலாக்கம்: தேசிய பதிவுத் துறை அறிவிப்பு
January 26, 2026, 1:01 pm
அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15% சொக்சோ பங்களிப்பை செலுத்த கிரேப் நிறுவனம் ஒப்புதல்: டத்தோஸ்ரீ ரமணன்
January 26, 2026, 11:18 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்: பிஎன் ரெட்டி
January 26, 2026, 11:02 am
சட்டவிரோத பணம்: முன்னாள் இராணுவ வீரரின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்
January 26, 2026, 9:02 am
எந்தவொரு முடிவு எடுக்கும் உரிமையும் மஇகாவுக்கு உண்டு: ஜாஹித்
January 26, 2026, 8:59 am
