நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் பத்துமலைக்கு வருகிறார்: டத்தோஸ்ரீ ரமணன்

பெட்டாலிங்ஜெயா:

தைப்பூச முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலைக்கு வருகிறார்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

உலகமெங்கும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

மலேசியாவை பொறுத்த வரையில் பத்துமலையில் இவ்விழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட வேண்டும்.

இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் பிரதமர் தைப்பூச விழாவிற்கு வரவில்லை.

அதற்கு முன்னதாக வரும் ஜனவரி 30ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் பத்துமலைக்கு வருகை புரிகிறார்.

தைப்பூச விழாவின் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கில் பிரதமர் பத்துமலைக்கு வருகிறார்.

மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது தான் பிரதமரின் முக்கிய இலக்காகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

அன்றைய தினம் நிறைய தலைவர்கள் பத்துமலைக்கு வருவார்கள்.

அதே வேளையில் பொதுமக்களும் திரளாக வந்து பிரதமருக்கு ஒற்றுமையாக வரவேற்பை வழங்க வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பாகும்.

மேலும் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை செய்வாரா என்ற கேள்விகள் எழுகிறது.

அதற்கு பதில் பிரதமரிடம் தான் உள்ளது. ஆக அனைவரும் பொருமையாக இருக்க வேண்டும்.

எது எப்படியிருந்தாலும் மக்கள் ஒற்றுமையாக பிரதமரை வரவேற்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset