நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டம் ரத்து: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து புக்கிட் தாகரில் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

கால்நடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி எழுந்துள்ள தவறான புரிதல்கள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மேலும் பண்ணைக்கான புதிய இடத்தைத் தேடும் போது மாநில அரசு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

நான் வெளிநாட்டில் இருந்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தப் பிரச்சினை உண்மையான உண்மைகள், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.

எனவே எங்களுக்கு இடம் அல்லது வேறு முறை தேர்வு செய்யப்பட்ட பிறகு, அதை தற்காலிகமாக ஒத்திவைத்து ரத்து செய்கிறோம்.

மாநில நிர்வாகக் குழு மாநில உள்கட்டமைப்பு,  வேளாண்மைத் துறைத் தலைவர் டத்தோ இஷாம் ஹாஷிமிடம் திட்டத்திற்கான மாற்றுப் பகுதியைக் கண்டுபிடிக்க அறிவுறுத்தியதாகவும் டத்தோஶ்ரீ அமிரூடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset