நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும்: தக்கியூடின்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி தலைவராக பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வரும் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டணியின் உச்சமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் டான்ஶ்ரீ மொஹைதின் பதவி விலகுவதற்கு உடன்படவில்லை.

இதனால் அவர் தலைவராக நீடிப்பார் என்று தேசியக் கூட்டணி துணை பொதுச்செயலாளர் தக்கியூடின் ஹசான் கூறினார்.

தேசியக் கூட்டணி தலைவரின் ராஜினாமாவை உச்சமன்றம் அங்கீகரித்தால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் நடத்தப்படும் என்று அவர் பாஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அது நிறைவேற்றப்படாவிட்டால், சட்டப்பூர்வமாக அவர் தலைவராக இருப்பார்.

புதிய தலைவரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset