நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிர்ணயிக்கப்பட்ட விலையில் சர்க்கரை விற்பனை செய்யாவிடில் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்

கோலாலம்பூர்:

அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சர்க்கரையை விற்பது, சர்க்கரையைப் பதுக்கி வைத்தல், நிபந்தனையுடன் சர்க்கரை வாங்குவது போன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபட்டால் அவர்களின் வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீனம் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விநியோகத்தைப் பாதிக்கும் அவர்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

கிளாந்தான், திரெங்கானு, பகாங், கெடா ஆகிய நான்கு மாநிலங்களில் மே 3-ஆம் தேதி முதல் நேற்று வரை தொடங்கப்பட்ட Ops Manis ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

அரசாங்கம் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் விளக்கினார். 

இது மீண்டும் நடந்தால், அவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள். எதிர்காலத்தில் வணிகத்தைத் தொடர உரிமத்தை இரத்துச் செய்யும் சூழல் ஏற்படலாம் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset