நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 பெரும் பணக்காரர்களுக்கான உதவித்தொகையை மட்டுமே குறைக்கின்றோம்: பிரதமர்

கோலாலம்பூர்: 

அனைத்துத் தரப்பு மக்களுக்கான மானியங்களை அரசாங்கம் குறைப்பதாகக் கூறி ஒரு சில அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கும் நடவடிக்கையைக் குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பினார்.

டி20 பிரிவுக்கான மின்சார கட்டண முன்முயற்சி மற்றும் ஹஜ் பயணத்தை மட்டுமே உள்ளடக்கியது என்று பிரதமர் வலியுறுத்தினார். இது மற்ற தரப்பினரின் உதவித் தொகையைப் பாதிக்காது என்றும் அவர் மேலும் விளக்கினார். 

நிதியமைச்சருமான அன்வார், பி40 மற்றும் எம்40 பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சுமக்கும் சுமையைக் குறைக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தப் பிரச்சினையைச் சிலர் அரசியலாக்க விரும்புவதாக இன்று மக்களவையில் பிரதமரின் கேள்வி அமர்வின் போது அவர் கூறினார்.

மக்களுக்குச் சுமையாக இருக்கும் மானியங்களைக் குறைக்கும் அணுகுமுறை குறித்து டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடினின் கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset