செய்திகள் உலகம்
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
வெலிங்டன் :
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். இவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியிலிருருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-ஆவது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்தக் கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும்.
இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும் என்று ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 5:04 pm
கோடிகளில் திருடும் கிரிப்டோ மோசடி: பேராசை மனிதநேயத்தை விழுங்கிவிட்டதா?
April 24, 2026, 5:23 pm
2,700 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய பூர்வகுடிகள்
April 24, 2026, 1:04 pm
தாய்லாந்தின் மெகா திட்டம்: 2 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் உருவாகிறது புதிய வர்த்தகப் பாதை
April 24, 2026, 12:37 pm
எரிசக்தித் துறையில் புதிய கூட்டணி: இந்தோனேசியாவிற்குச் சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா சம்மதம்
April 24, 2026, 9:47 am
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்: சர்வதேச ஊடக சங்கம்
April 23, 2026, 4:24 pm
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
April 23, 2026, 3:00 pm
