
செய்திகள் உலகம்
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
குவைத்:
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தின் மூலம் 40,000 மரக்கன்றுகள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்குப் பகுதிகளில் வளர்க்கப்படும் முருங்கை நாற்றுகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன.
மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் முருங்கை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சித் தலைவர் ஃபாத்திமா அல்-கைத் தெரிவித்தார்.
நாட்டின் ஆறு கவர்னரேட்டுகளில் அமைந்துள்ள முப்பத்தைந்து ஜமியாக்கள் மூலம் நாற்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.
www.moringakuwait.com என்ற இணையதளம் மூலம் முருங்கையின் மருத்துவ குணங்கள் மற்றும் முருங்கை தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் தலைவர் விளக்கம் அளித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm